6 லட்சம் கோடிக்கு மேல் கடனில் தத்தளிக்கிறது: டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது பேசிய அவர்,
அம்மாவின் உண்மையான தொண்டர்களால் வழி நடத்தப்படுகின்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எஸ்டிபிஐ ஓவைசி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. தமிழ் நாட்டின் வளங்களை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டார்கள். 6 லட்சம் கோடிக்கு மேல் கடனில் தத்தளிக்கிறது. எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களையும் அரசாங்கத்தில் நடைபெறவில்லை, திட்டங்களும் செயல்படுத்தவில்லை. ஆனால் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனில் இருக்கிறது என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் எப்படி ஒரு லட்சம் கோடி கடன் எப்படி வந்தது. நெடுஞ்சாலை துறையில் எவ்வளவு முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் மாமன், மச்சான், அண்ணன், தம்பி என்று எடப்பாடியின் உறவினர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏறக்கூடிய காலம் நெருங்கிவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் 25 கோடி பதுக்கி வைத்திருக்கிறார்கள். காந்தி தாத்தாவை நம்பி அவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் கூட நடைமுறையில் சாத்தியமில்லாத எல்லாம் கூறி உள்ளனர். நான்கு வருடமாக ஆட்சியில் இருந்தவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்கி தராமல் தற்போது வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவோம் என்று ஏமாற்றப் பார்க்கிறார்கள். விஞ்ஞான பூர்வ ஊழல்களுக்கு பெயர் பெற்றவர்கள் திமுக.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் செல்வங்களை பறிகொடுக்கும் சூழ்நிலை ஏற்படும். கருத்துக் கணிப்பு என்ற பெயரிலே கருத்துக் திணிப்பு நடத்த பார்க்கிறார்கள். ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி கிடைத்திட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட தமிழகம் வளர்ச்சி பாதைக்கு செல்வதற்கும் வாக்களிக்க வேண்டிய சின்னம் குக்கர் சின்னம். ஊழலற்ற லஞ்ச லாவண்யம் இல்லாத வெளிப்படையான ஆட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். ஸ்ரீரங்கத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத அடிமைப் பிரச்சினை தீர்க்கப்படும். பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu