திருச்சி சோமரசம்பேட்டையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

திருச்சி சோமரசம்பேட்டையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
X
திருச்சி அருகே சோமரசம் பேட்டையில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள கீழவயலூர் செல்லும் சாலையில் ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடிக் கொண் டிருப்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்த சாதிக் பாட்சா (40), அதே பகுதியை சேர்ந்த பஷீர் முகமது (37), புங்கனூர் அம்மாசி நகர் பகுதியைச் சேர்ந்த பூபதி (40), சோமரசம்பேட்டை எட்டு மாந்திடல் மோகன் (39), பாலக்கரையை சேர்ந்த பழனியாண்டி (29), சாமிநாதன் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிட மிருந்து ஒரு சீட்டு கட்டு, ரூ.8,300 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!