திருச்சியில் ஆட்டோவில் கடத்திய 50 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

திருச்சியில்  ஆட்டோவில் கடத்திய 50 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
X
திருச்சியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்திய 50 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பஞ்சக்கரை அருகே ஸ்ரீரங்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்து ஆட்டோவில் 5 மூட்டைகளில் இருந்த போதை பொருட்களை போலீசார் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தது தென்னூர் ரெஜிமண்டல் பஜாரை சேர்ந்த தவக்கல் பாட்ஷா (வயது 60) என்பது தெரியவந்தது.

மேலும், குட்கா பொருட்களை தென்னூரை சேர்ந்த பக்ருதீன் என்பவர் ஏற்றி விட்டு, ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை சக்திநகரில் உள்ள அசோக் (44) என்பவரின் வீட்டில் இறக்கி வைத்து விட்டு வரக்கூறியதாக கூறினார். தொடர்ந்து ஆட்டோ மற்றும் 50 கிலோ எடை யுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அசோக், பக்ருதீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture