திருச்சி மாவட்டத்தில் 157 பதற்றமான வாக்குச்சாவடிகள்- கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் 157 பதற்றமான வாக்குச்சாவடிகள்- கலெக்டர் தகவல்
X
திருச்சி மாவட்டத்தில் 157 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கலெக்டர் சிவராசு கூறி உள்ளார்.

திருச்சி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவராசு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த சிவராசு கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகளில் மொத்தம் 1,262 வாக்கு சாவடிகளில் தேர்தல் நடைபெறும். திருச்சி மாவட்டத்தில் 157 வாக்கு சாவடிகள் பதட்டமான வாக்கு சாவடிகள் என்று கண்டறியப்பட்டது. குற்றச் சம்பவங்களை தடுக்க அனைத்து வாகுச்சாவடிகளுக்கும் நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப் கேமராக்கள் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

1,518 - இ.வி.எம் கருவிகள் திருச்சி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. கண்காணிக்க 20 தேர்தல் உள்ளூர் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிரச்சாரத்தில் இருசக்கர வாகனம் அனுமதி கிடையாது. கொரோனா பரவல் பாதிப்பு குறைந்து வந்தாலும் அது முற்றிலும் முடிவுக்கு வரவில்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார். சிறார்களை கண்டிப்பாக தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் 5796வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 21 பயிற்சி மையங்களில் 3 கட்டமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் தேர்தல் பணிகளை கண்காணிக்க 20 உள்ளூர் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture