ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
X

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் ஐடிஐ அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். இதில் ஸ்ரீரங்கம் சாஸ்திர விதி மாணிக்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!