திருச்சியில் லாட்டரி விற்பனை- 4 பேர் கைது

திருச்சியில் லாட்டரி விற்பனை- 4 பேர் கைது
X

திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்ததாக நான்கு பேரை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதை தடுக்கும் வகையில், மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தனிப்படை குழு நாகராஜ் தலைமையிலான போலீசார் சோமரசம் பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த சேது (52), கார்த்திக்(29), சத்தியமூர்த்தி(30), செல்வகுமார்(33) ஆகிய 4 பேரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5050 ரூபாய், லாட்டரி சீட்டு விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் மீது திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!