லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதை தடுக்கும் வகையில், மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் காவல்துறையினர் திருச்சி ஜீயபுரம் பகுதியில் நடத்திய சோதனையில், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட ஜீயபுரம் மற்றும் பெரிய கருப்பூர் பகுதியைச் சேர்ந்த, பரமசிவம்(51), சந்திரசேகர்(49), ராமகிருஷ்ணன்(49),லோகநாதன்(42) உள்ளிட்ட 4 பேரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4,500 ரூபாய், லாட்டரி சீட்டு விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 செல்போன்கள் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் மீது ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!