இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
X
இந்திய ஜனநாயக கட்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி ஐஜேகே கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஐஜேகே கட்சி சார்பில் பிரான்சிஸ் மேரி போட்டியிடுகிறார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி நாகமங்கலத்தை சேர்ந்த பிரான்சிஸ் மேரியின் கணவர் செல்வராஜ். இந்நிலையில் இன்று பிரான்சிஸ் மேரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் பிரான்சிஸ் மேரி வேட்புமனுவை தாக்கல் செய்தபோது ஐஜேகே மாநில இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!