ஸ்ரீரங்கம் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு

ஸ்ரீரங்கம் கோயில் இணைஆணையர் பொறுப்பேற்பு
X

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையராக மாரிமுத்து இன்று பொறுப்பேற்றார்.

பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயிலில் ஏற்கெனவே 7 ஆண்டுகள் இணை ஆணையராக பணியாற்றி வந்த பொன். ஜெயராமன் பணியிட மாறுதலில் சென்றதைத் தொடர்ந்து வேலூரில் இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையராக பணியாற்றி வந்த மாரிமுத்து, பணியிட மாறுதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையராக இன்று (4 ம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அறங்காவலர்கள், கோயில் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!