தி மு க வில் இருந்து நான் ஏன் விலகினேன்? குஷ்பு விளக்கம்

தி மு க வில் இருந்து நான் ஏன் விலகினேன்? குஷ்பு விளக்கம்
X
தாத்தாவுக்கு இப்படி ஒரு பேரனா? -குஷ்பு

பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருச்சி, அந்தநல்லூர் ஒன்றியம் கோப்பு கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி மிக சிறப்பாக உள்ளது.

ஸ்டாலினையும் கலைஞரையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது.

அதிமுக திமுக இரு பெரும் கட்சிகளும் தலைவர்கள் இல்லாமல் தேர்தலை சந்திக்கப் போகிறது. இது பெரிய சவாலாக இருக்கும். இந்தியாவில்70 சதவீத விவசாயிகள் உள்ளனர். அதில் 10% விவசாயிகள் மட்டுமே போராடி வருகின்றனர்.மத்திய அரசு வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பேசி வருகிறது. ஒரு சில கட்சிகள் வேளாண் மசோதாவை விவசாயிகளுக்கு எதிரானது என பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தற்போது ஆளும் அதிமுகவின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது.

பெண்களை இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாரே? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு

தாத்தாக்கு இப்படி ஒரு பேரனா? என கிண்டல் அடித்தார்.

கலைஞர் உயிருடன் இருந்த போது இருந்த திராவிட கழகம் வேறு தற்போதைய திராவிட கழகம் வேறு எனவேதான் நான் திமுகவில் இருந்து விலகினேன் என்றார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்