ஸ்ரீரங்கத்தில் இரண்டாம் நாள் பகல் பத்து.

ஏகாதசி திருவிழா.

ஸ்ரீரங்கத்தில் இரண்டாம் நாள் பகல் பத்து. 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நேற்று முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று இரண்டாம் நாள் பகல் பத்து வைபவத்தின் நம்பெருமாள் காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார் .முத்து சாய் கொண்டை, அபயஹஸ்தம், தங்கக்கிளி, பவளமலை அலங்காரத்தில் புறப்பட்ட நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கு ரங்கா ரங்கா கோஷத்துடன் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நம் பெருமாள் சேவை சாதித்தார்.

Tags

Next Story
ai in future agriculture