ஸ்ரீரங்கம் அரங்கநாதர் அபயஹஸ்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவில், வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து முதல் நாள் திருநாளில் நம்பெருமாள் நீள்முடி கிரீடம், வைர அபயஹஸ்த அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவில் வைகுண்ட ஏகாதசி விழா.

பகல்பத்து முதல் நாள் திருநாளில் நம்பெருமாள் நீள்முடி கிரீடம்,வைர அபயஹஸ்த அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது மான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் விழாக்கள் நடைபெற்றாலும் கூட இந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இவ்விழாவினை காண இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பெருமாள் பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருகை தருவது வழக்கம்.

இத்தகைய புகழ்வாய்ந்த வைகுண்ட ஏகாதசி விழா நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது.

திருமொழித் திருநாள் எனப்படும் பகல்பத்து முதல் நாள் இன்று துவங்கியது.

இதில் காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் தனுர் லக்னத்தில், நம்பெருமாள் நீள் முடி கீரிடம், வைர அபயஹஸ்தம் , திருமார்பில் லட்சுமி பதக்கம் ,கர்ண பூசனம் , பவளமாலை, அடுக்கு பதக்கம் , சூரிய பதக்கம் , அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேலப்படி வழியாக வெளிவந்து, இரண்டாம் பிரகாரம் ராஜமகேந்திரன் சுற்று வழியாக அர்ஜின மண்டபத்தை சென்றடைந்து அங்கு பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

Tags

Next Story
தொப்பை இருக்கனால பயப்படுறீங்களா !! கவலை வேண்டாம், அதற்கான டிப்ஸ் ....