'மோடியின் பலம் ராகுலுக்கு தெரியும்'- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி அளித்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கூறியதாவது:-
திருச்சி அரிஸ்டோமேம்பாலம் தொடர்பான கோப்பு மத்திய அமைச்சர் ஆணைக்காக உள்ளது. வரும் 2-ஆம் தேதி டெல்லி சென்று இது குறித்து பேசுவேன்.விரைவில் மத்திய அரசு ஆணை கிடைத்து மேம்பாலத்திற்கான பணி தொடங்கும்.
ராகுல் காந்திக்கு,மோடியின் பலமும் தெரியும்,பலவீனமும் தெரியும். யாரிடமும் சென்று பாடம் கற்றுகொள்ளவேண்டிய அவசியம் ராகுலுக்கு கிடையாது. மோடியை சமாளித்து,வெற்றி பெற கூடிய ஒரே தலைவர் ராகுல் தான். விரைவில் காலம் இதனை தெரிவிக்கும் என்பதை பிரசாந்த் கிஷோருக்கு தெரிவித்து கொள்கிறேன்.
ஆளுநர்களுக்கு அரசியல்சட்டங்களில் ஒரு எல்லை உண்டு.பி.ஜே.பி. அரசில் ஆளுநர்கள் தேர்தெடுக்கப்பட்ட மாநிலஅரசுகளை தொல்லை கொடுத்துவருகிறார்கள். இது திட்டமிட்டுநடைபெற்று வருகிறது.தமிழகத்திற்கு புதிதாக வந்துள்ள ஆளுநர் தனது எல்லை கோட்டைதெரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். அவர் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நகர்புற தேர்தலிலும் தி.மு.க-காங்கிரஸ்உறவு சுமூகமாக தொடரும். ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை,சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவேண்டும். பரோலில் செல்வதை நாங்கள் விமர்சிக்க வில்லை.காங்கிரஸ் இல்லாத நாட்டைஉருவாக்குவோம் என்று மோடிசொல்வது ஜனநாயக விரோதம்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu