விஜய் ரசிகர் மன்ற மாநில நிர்வாகிக்கு திருச்சி ரசிகர் மன்றத்தினர் எதிர்ப்பு

விஜய் ரசிகர் மன்ற மாநில நிர்வாகிக்கு    திருச்சி ரசிகர் மன்றத்தினர் எதிர்ப்பு
X

திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்டத் தலைமை தளபதி விஜய் ரசிகர் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்   

திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள் மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு, திருச்சி மாவட்டத் தலைமை தளபதி விஜய் ரசிகர் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், தொட்டியம் பகுதி முன்னாள் விஜய் ரசிகர் மன்ற செயலாளர் பாரதிராஜா கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக திருச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை நிர்வாகிகளாகவும், ஒன்றிய, நகர பகுதிகளை மன்ற நிர்வாகிகளும் செயல்பட்டு வந்ததோம். தற்போது தங்களை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பெயரில் ரசிகனாகவும், கிளை இயக்க பதிவு எண் கொண்டு நலத்திட்ட பணிகளை செய்யக்கூடாது எனவும், தொடர்ந்து நலத்திட்ட பணிகள் செய்தால் மிரட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக விஜய் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாததற்கு காரணம் விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் என்றும், மூத்த நிர்வாகிகள் எந்த ஒரு நல திட்டமும் செய்ய விடாமல் தடுக்கிறார். தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் இது தொடர்பான பிரச்சினை நிலவி வருகிறது. கடைக்கோடியில் உள்ள விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் விஜய் பெயரை பயன்படுத்தக்கூடாது என பலர் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினர்.

விஜய்க்கு இது குறித்த எதுவும் தெரியாது. எனவே இந்த செய்தியை பார்க்கும் தளபதி விஜய், இந்த பிரச்னைகள் குறித்து உரிய விசாரணை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!