தேசிய நல்லாசிரியர் விருது: திருச்சியைச் சேர்ந்த ஆசிரியை தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருது: திருச்சியைச் சேர்ந்த ஆசிரியை தேர்வு
X
தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்

முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் 44 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் இரண்டு ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், திருச்சி ,பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியை ஆஷா தேவி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாண்டிச்சேரியை சேர்ந்த ஆசிரியை ஒருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!