முசிறி அருகே வாலிபர் எரித்துக்கொலை? உடல் பாலத்திற்கு அடியில் வீச்சு

முசிறி அருகே வாலிபர் எரித்துக்கொலை? உடல் பாலத்திற்கு அடியில் வீச்சு
X
திருச்சி மாவட்டம் முசிறி அருகே எரித்துகொலை செய்யப்பட்ட இளைஞர் உடல் பாலத்திற்கு அடியில் வீசப்பட்டுள்ளது.

முசிறி அருகே தேவரப்பம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு துறையூர்-நாமக்கல் சாலையில் தேவரப்பம்பட்டி பகுதியில் காட்டாற்று பாலம் ஒன்று உள்ளது. இதன் அடியில் வாலிபர் சடலம் ஒன்று கருகிய நிலையில்கிடப்பதாக ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தவருக்கு சுமார் 20 வயதிலிருந்து 25 வயது இருக்கும். அவரை வெளியே கொலைசெய்து சடலத்தை சம்பவ இடத்தில் கொண்டு வந்துமர்ம நபர்கள் போட்டு சென்றதும், முதல் கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் வாலிபரின்அடையாளத்தை மறைப்பதற்காக கொலையாளிகள் டீசல் ஊற்றி சடலத்தை எரிக்க முயற்சி செய்துள்ளனர். வாலிபர் யார்?அவரை கொலை செய்துவீசி சென்ற நபர்கள் யார்?கொலைக்கான காரணம்என்ன? என்று பல்வேறுகோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்தகொலையில் துப்பு துலக்குவதற்காக சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் ஸ்பார்க் வரைவழைக்கப்பட்டது. கைரேகை தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலம் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!