நகர்புற உள்ளாட்சி தேர்தல்: காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் பாதுகாப்பு பணி தீவிரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் பாதுகாப்பு பணி தீவிரம்
X

முசிறி அடுத்த காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

முசிறி அடுத்த காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணி.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காட்டுப்புத்தூர் பேரூராட்சியில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் உமாராணி, துணை அலுவலர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம், தனிப்பிரிவு காவலர் ரவிச்சந்திரன், காவலர்கள் சண்முகம், வினோத் உள்ளிட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இங்கு முதல் நாளான நேற்றும், 2- வது நாளான இன்றும் எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!