முசிறி காவல் நிலையத்திற்கு மத்திய அரசின் உள்துறை விருது

முசிறி காவல் நிலையத்திற்கு மத்திய அரசின் உள்துறை விருது
X

மத்திய அரசின் விருது பெற்ற முசிறி காவல் ஆய்வாளருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையத்திற்கு மத்திய அரசின் உள்துறை விருது வழங்கப்பட்டது.

திருச்சி முசிறி காவல்நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல்நிலையத்திற்கான உள்துறை விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஆண்டு தோறும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சிறந்த போலீஸ் நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. மக்களுக்கு சிறந்த சேவை, குற்ற நடவடிக்கைகள் குறைவு, அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திய விதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல்நிலையத்திற்கான விருது இந்த ஆண்டு திருச்சி மாவட்டம் முசிறி காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து த தமிழக காவல் துறையின் தலைமை இடமான சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு இந்த விருது வந்து சேர்ந்தது.

இந்தநிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் சந்தித்து விருதினை காண்பித்த முசிறி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமை காவலர் மகாமுனி, காவலர் ஆனந்தராஜ் ஆகியோருக்கு வெகுமதி வழங்கி தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business