முசிறியில் 22-ம் தேதி திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

முசிறியில் 22-ம் தேதி திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
X
திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மு. பரஞ்ஜோதி.
முசிறியில் 22-ம் தேதி திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க, விடியா தி.மு.க அரசை வலியுறுத்தி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பாக, விவசாயப் பெருங்குடி மக்களோடு இணைந்து வருகின்ற (22.1.2022) சனிக்கிழமை காலை 10மணி அளவில் முசிறி கைகாட்டி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அது சமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!