முசிறியில் குளம் மேம்படுத்தும் பணிகளை திருச்சி கலெக்டர் சிவராசு ஆய்வு
முசிறியில் புதிய நூலகம் கட்டுமான பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம், கோமங்கலம் ஊராட்சி காவேரி பாளையம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் குளம் மேம்பாடு செய்யும் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட சந்தைக்குட்டை குளத்தினையும், திருத்தியமலை ஊராட்சி ராயப்பட்டி கிராமத்தில் ஊத்துக்குழி குளம் வௌ்ளூர் ஊராட்சி ஆணைப்பட்டி கிராமத்தில் உள்ள குளம் மேம்படுத்தும் பணியினையும், நெய்வேலி ஊராட்சி, பெண்ணாம்பட்டி கிராமத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.5.25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுகாதரா வளாகத்தையும் மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து முசிறி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட கட்டுமானப் பணிகளையும், விளையாட்டு மையதானம் அமையவுள்ள இடத்தினையும், முசிறி நகராட்சியில் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்படவுள்ள இடத்தினையும், எரிவாயு மின் மயானம் அமையவுள்ள இடத்தினையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பணிகளை விரைவாகவும், தரமானதாவும் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினாh;. இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வளர்ச்சித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu