தொட்டியத்தில் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1.70 லட்சம் திருட்டு

தொட்டியத்தில் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1.70 லட்சம் திருட்டு
X
தொட்டியத்தில் லாரி டிரைவர் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1.70 லட்சம் பணம் திருட்டு போனது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் பண்டார தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது48). லாரி டிரைவர். இவரது மனைவி தேவி. இவர் அப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை சண்முகம் அவரது மனைவியை வேலைக்கு விட்டு விட்டு தனது இருசக்கர வாகனத்தில் தோளூர் பட்டியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றார்.

பின்னர் மீண்டும் மதியம் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சண்முகம் தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!