தொட்டியம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் சாவில் மர்மம் இருப்பதாக புகார்

தொட்டியம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் சாவில் மர்மம் இருப்பதாக புகார்
X

தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் சிவக்குமார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொசவம்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் கொசவம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று பாட ஆசிரியராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் சிவகுமார் (வயது 40). திருமணம் ஆகாத இவர், தொட்டியத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தனது தாயார் பொற்றாமரையுடன் தங்கி, ஆசிரியர் பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவகுமார், கடந்த 30-ந் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஆசிரியர் சிவகுமார் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவரது சாவுக்கு, சக ஆசிரியர்களின் மிரட்டலே காரணம் என்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு எழுதிய 4 பக்க கடிதம் அவரது வீட்டில் சிக்கியது.

இந்த கடிதத்தை அவரது சசோதரர் பிரசன்னா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனுவாக அனுப்பி விசாரணை நடத்த கோரி உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!