திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
X

தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அமைச்சர் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்தில் இன்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என். நேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இந்த முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை அமைச்சரிடம் வழங்கினார்கள்.

மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், கதிரவன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய தலைவர் புனிதராணி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!