சத்துணவு மையத்தில் அரிசி, பருப்பு கடத்தியவரை மடக்கி பிடித்த பொது மக்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் (பைல் படம்)
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே மகாதேவி மலையப்ப நகர் காலனியில் ஆதிதிராவிடர் நல அரசு துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் அமைப்பாளராக பணியாற்றுபவர் சுசீலா. நேற்று இவர் தனது கணவர் சிதம்பரத்திடம் சத்துணவு மையத்தில் இருந்து 2 மூட்டை அரிசி மற்றும் ஒரு மூட்டை பருப்பு ஆகியவற்றை டூவீலரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.
இதனை கண்ட அப்பகுதி கிராமத்தினர் மற்றும் இளைஞர்கள் சிதம்பரம் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி அரிசி மூட்டை மற்றும் பருப்பு ஆகியவற்றை சோதித்தனர். அது சத்துணவு மைய குழந்தைகளுக்கு சமைத்து போடுவதற்காக அரசால் வழங்கப்பட்ட அரிசி, பருப்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் சரமாரி கேள்வி எழுப்பிய கிராமத்தினர் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற சத்துணவு மேலாளர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் மலையப்ப நகர் பகுதியை சேர்ந்த ராஜூ என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது குறித்து ஒன்றிய அலுவலர்கள் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu