2 மனைவிகளை ஏமாற்றி விட்டு கள்ளத்தொடர்பில் இருந்த போலீஸ்காரர் டிஸ்மிஸ்

2 மனைவிகளை ஏமாற்றி விட்டு கள்ளத்தொடர்பில் இருந்த போலீஸ்காரர் டிஸ்மிஸ்
X

சித்தரிக்கப்பட்ட படம்.

இரண்டு மனைவிகளை ஏமாற்றி விட்டு 3-வது பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த போலீஸ்காரர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியம் முத்துராஜா பாளையத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 33). இவர், சிறுகனூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு பட்டாலியன் காவலர் பிரிவில் பணிக்கு சேர்ந்தார். தொடர்ந்து, ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றினார். இதையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு இவருக்கு முறைப்படி திருமணம் நடந்தது. அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவியை தனது சொந்த ஊரான முத்துராஜாபாளையத்தில் உள்ள தனது பெற்றோரிடம் குடி வைத்துள்ளார்.

இதையடுத்து, 2016-ஆம் ஆண்டு தா.பேட்டை பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. 2-ஆவதாக திருமணம் செய்த பெண்ணை முசிறி காவலர் குடியிருப்பில் வைத்துள்ளார். இந்நிலையில், சிறுகனூரில் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு செல்லாமல், 3-வது பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். பல நாட்களாக வீட்டிற்கு வராமலே நவீன் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த 2-ஆவது மனைவி, நவீன் குறித்து விசாரித்த போது, அவர் மூன்றாவது பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து இரண்டாவது மனைவி, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் புகார் செய்தார். ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில், திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் நேரடி விசாரணை செய்தார். விசாரணையில், மன்மத காவலர் நவீன் 3-ஆவதாக ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எஸ். பி்.சுஜித்குமார், காவலர் நவீனை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து நேற்று உத்தரவிட்டார்.

டிஸ்மிஸ் செய்யப்பட்ட நவீன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, பல்வேறு சர்ச்சையில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!