தொட்டியம் அருகே ஊராட்சி தலைவர் மனைவியிடம் நகை திருட்டு

தொட்டியம் அருகே ஊராட்சி தலைவர் மனைவியிடம் நகை திருட்டு
X
நகையை பறிகொடுத்த ஊராட்சி தலைவர் மனைவியிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகில் உள்ள ஸ்ரீராம சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் நவஜோதி. இவரது மனைவிகுணசுந்தரி. இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் தாலிக்கொடியை திருடி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் காவல்நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நவஜோதி மனைவி குணசுந்தரி புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் முசிறி உட் கோட்ட துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) விக்னேஷ்தமிழ்மாறன் மற்றும் தொட்டியம் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், காட்டுப்புத்தூர் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைத்து இரவில் திருடி சென்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்