தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் முசிறி வட்ட கிளை கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் முசிறி வட்ட கிளை கூட்டம்
X

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் முசிறி வட்ட கிளை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் முசிறி வட்ட கிளை கூட்டம் வட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

தமிழ் நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் (நடவடிக்கைக்குழு)திருச்சி மாவட்டம்முசிறி வட்டக் கிளை சார்பில் ஆகஸ்ட் மாதக் கூட்டம் நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்திற்கு வட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் பொன்னுசாமி அனைவரையும் வரவேற்றுப்பேசினார் ஆகஸ்ட் திங்கள் பிறந்த உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. செயலாளர் திருஞானம் ஜூலைத்திங்கள் சங்கப் பணிகளை அறிக்கையாக வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் நிதி நிலை அறிக்கை வாசித்தார்.

தலைவர் நேர்காணல் பற்றியும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை பெறுவதற்கு, பூர்த்தி செய்து அளிக்கவேண்டிய படிவம் பற்றியும் விளக்கமாகப்பேசினார்.

சிறப்பு அழைப்பாளர் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து சங்கம் ஆற்றியப்பணிகள், ஆற்றவேண்டியப்பணிகள் பற்றி விளக்கினார்.வட்டக்கிளைகள் சிறப்பாக செயல்பட வேண்டினார்.

திருச்சி கிழக்கு வட்டத்துணைத்தலைவர் பாலசுப்ரமணியன் உறுப்பினர்கள் சேர்க்கை பற்றியும், அரசு வழங்கவேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகைப் பற்றியும் கூறினார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஓய்வூதியர்களுக்கு 3 % அகவிலைப்படியை 01-01-2022.முதல் வழங்கவேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விடுபட்டோர் மட்டும் சேர அரசாணை பிறப்பிக்க வேண்டும்.கட்டாயப்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைத்தலைவர் சண்முகசுந்தரநாதன் நன்றி கூற, நாட்டுப்பண் அனைவராலும் பாடப்பட கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!