தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி கிளை கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி கிளை கூட்டம்
X

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி வட்ட கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி கிளை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் திருச்சி மாவட்டம். முசிறி வட்ட அக்டோபர் மாத கிளை கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சவுந்தரம் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் செ. திருஞானம் செயல் அறிக்கை வாசித்தார்.இம்மாத சங்க செயல்பாடுகளை விளக்கி கூறினார். பின்னர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.

சென்ற மாதக் கூட்டத்தில் அறிவித்தவாறு தலைவர் புதிய பொறுப்பாளர்கள் தேர்தலை நடத்தினார். அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியின்றி ஒரு மனதாக புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் உறுப்பினர் எஸ். செல்லப்பன் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்திப் பேசினார். வந்திருந்த அனைவருக்கும் திருமதி.ப. காந்திமதி அவர்கள் இனிப்பு காரத்துடன், கைத்தறி ஆடை வழங்கினார். வள்ளியம்மை அவர்கள் இனிப்பு காரம் தேநீர் வழங்கி சிறப்பித்தார். இறுதியில் கேசவன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

இந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு 65 வயது முடிவில் 5 சதவீதம் ஆகவும், 70 வயது முடிவில் 10 சதவீதம் ஆகவும், 75 வயது முடிவில் 15 சதவீதமாகவும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவப் படி மாதம் ரூபாய் 300/= வழங்குவதை ரூபாய் 1000/=ஆக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந் கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business