தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி கிளை கூட்டம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி கிளை கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் முசிறி வட்ட கிளை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் ஆகஸ்ட் மாதக் கூட்டம் இன்று 06-08-2023.ஞாயிறு பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இக் கூட்டத்திற்கு வட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் பொன்னுசாமி அனைவரையும் வரவேற்றார். தலைவர் தன் உரையில் ஓய்வூதியர்கள், அவர்களுக்குரிய காலத்தில் நேர்காணல் செய்ய வேண்டிய முறைகளை விவரித்தார். மேலும் ஓய்வூதியர்கள் தங்கள் இணையர் விவரப் படிவம் உறுப்பினர்களுக்கு வழங்கி கருவூலத்தில் கொடுக்க வலியுறுத்தினார். செயலாளர் திருஞானம் மாதாந்திர அறிக்கை வாசித்தார். இம்மாத சங்க செயல்பாடுகளை விளக்கிக் கூறினார்.
பொருளாளர் செல்வராஜு வரவு, செலவு அறிக்கை வாசித்து ஒப்புதல் பெற்றார். மூத்த உறுப்பினர் சக்திவேல் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு, காரம், தேநீர், வழங்கி சிறப்பித்தார். கூட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குறைகள் மற்றும் பிரச்சினைகளை எடுத்து கூறி அவற்றை தீர்த்து வைக்கும்படி கோரிக்கை வைத்தனர்.
இறுதியில் பொருளாளர் செல்வராஜ் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
இந்த கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக பத்து சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும், மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்தும்போது, தமிழக அரசும் உயர்த்தி தரவேண்டும் என்ற இந்த இரண்டு தீர்மானங்களும் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu