தொட்டியம் அருகே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் தகராறு- அடிதடி

தொட்டியம் அருகே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால்  தகராறு- அடிதடி
X
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதில் தகராறு. இருவர் மீதும் வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அலகரை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 50). இவர் நேற்று மணமேடு பஸ் நிறுத்தம் அருகே நின்றபோது, அந்த வழியாக வந்த மணமேடு கிராமத்தை சேர்ந்த ரவி (55) என்பவரிடம், தான் கடனாக கொடுத்த ரூ.4 ஆயிரத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் குச்சியாலும், கட்டையாலும் தாக்கிக்கொண்டனர்.

இதில் ரவியின் ஸ்கூட்டரை வடிவேல் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட காயம் காரணமாக இருவரும் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடிவேல் மற்றும் ரவி இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் வடிவேல் மற்றும் ரவி ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story