முசிறி அருகே புதிய ரேஷன் கடையை அமைச்சர் கே.என்.நேரு திறந்தார்

முசிறி அருகே புதிய ரேஷன் கடையை அமைச்சர் கே.என்.நேரு திறந்தார்
X

முசிறி அருகே வேங்கை மண்டலத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் நேரு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

முசிறி அருகே வேங்கை மண்டலத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ளது வேங்கைமண்டலம் கிராமம். இங்கு புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது. இந்த கடையினை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என். நேரு இன்று திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், தியாகராஜன், ஸ்டாலின் குமார், முசிறி ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன், மற்றும் கூட்டுறவு சங்க இணைப்பாளர்கள் பாண்டியன், ஜெயராமன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!