திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கியவர் கைது

திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கியவர் கைது
X

பைல் படம்.

பஞ்சாயத்து செயலாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காடுவெட்டி ஊராட்சி செயலாளர் சரவணன் (48). இவர் சம்பவத்தன்று கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேலவழிக்காட்டைச் சேர்ந்த அருள் என்பவர், எங்கள் பகுதியில் மின் கம்பம் சரியாக இல்லை. விளக்கு எரிவது இல்லை என்று கூறி தகாத வார்த்தையால் திட்டி ஊராட்சி செயலாளர் சரவணனை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!