திருச்சி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தற்கொலை

திருச்சி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தற்கொலை
X
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம், முசிறி காந்தி நகர்பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபிநாத் மதுவுக்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை கோபிநாத்தின் மனைவி தனலட்சுமி (வயது 22), பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்த நிலையில் தனது செல்போனில் தனலட்சுமி கோபிநாத்தை ஆஸ்பத்திரிக்குஅழைத்துள்ளார்.அப்போது அவர் மது போதையில் பேசியுள்ளார்.இதனால் தனலட்சுமியும் திட்டியுள்ளார்.

இதில் மனமுடைந்த கோபிநாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.இது குறித்து தனலட்சுமி முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவுசெய்து கோபிநாத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story