திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
X

திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்.

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள எம். புத்தூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டு சென்றனர்.

தமிழகத்தில் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள், 100 நாளில் தி.மு.க அரசின் சாதனைகள், முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் மக்கள் நலனுக்காக அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்தியவைப் பற்றிய புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

Tags

Next Story
ai based agriculture in india