பழங்குடியின பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு திறன் பயிற்சி முகாம்
தொட்டியத்தில் நடந்த பழங்குடியின பட்டதாரிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி முகாமினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு சிறப்புத் திறன் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (18.11.2023) தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின பட்டதாரிகளுக்கான இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு சிறப்புத்திறன் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
இங்கு வருகை தந்து பயிற்சியில் கலந்துகொள்ள உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பை பெறுவது மற்றும் தொழில்முனைவோராக ஆவது என்கிற எண்ணம் இருக்கும். மிகமுக்கியமாக அனைவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் அவசியம் தேவை. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அந்த வசதி சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு என்பது பெரும்பாலானவர்களுக்கு கிடைப்பதில்லை. அதற்கு காரணம் நாம் நம்மை முழுமையாக தயார்படுத்திக் கொள்ளமால் இருப்பதே.
பல வேலைவாய்ப்புகள் இருந்த போதும் நாம் நமது இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி உழைப்போமேயானால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். தனியார் வேலைவாய்ப்பு முகாமை அரசு நடத்தி வருகிறது. அதில் பங்குபெறுவோர் பணியாணை கிடைத்தும் வேலைக்குச் செல்ல தயங்குகின்றனர்.பெரும்பாலும் எல்லோருக்குமே அரசு பணிக்குச் செல்ல ஆசை இருக்கிறது. அது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. இன்றிலிருந்து சரசரியாக ஒரு வருடம் 365 நாட்கள் கூடுதலாக 5 மணிநேரம் தங்கள் எந்த துறையை தோ்ந்தெடுக்கின்றீர்களோ அத்துறையில் மேன்மைமிக்கவர்களாக வரக்கூடிய அளவிற்கு படிக்க வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் சந்திக்கின்ற வேலை வாய்ப்பில் உங்களை நிராகரிக்க முடியாத நிலை ஏற்படும். ஏதோ ஒரு வேலை என்று சலிப்புடன் 20 வருடங்கள் உழைத்து ஒரு உயர்ந்த நிலைக்கு வருவதை தங்களது கடின உழைப்பின் மூலம் அதாவது போட்டித்தேர்வுக்கு உங்களை முழுமையாக தயார்படுத்திக் கொள்வது உயர்ந்த இடத்திற்கு இட்டுச்செல்லும்.
இது போன்ற ஒரு முகாம் உங்களுடைய தன்னம்பிக்கையை வெளிகொணருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு எத்தனை நபர்கள் பயனடைந்துள்ளனர் என்றால் 90 சதவீத மாணவர்கள் வேலை வாங்கி கொண்டு செல்வோம் என்ற நம்பிக்கையில் உள்ளதாக அறிகிறேன். எந்த மாதிரியான வேலை வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த மாதிரியான வேலையில் குறைந்தளவு கல்வித்தகுதி, அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக மென்பொருள் பொறியாளர் என்ற பணிக்கு தேவைப்படக்கூடிய மொழி ஜாவா என்பதாகும். திட்ட பகுப்பாய்வாளர் (டேட்டா அனலைசர்) என்பது அதைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதைப்பற்றி முதலில் தெரிந்திருக்க வேண்டும். அரசு வேலையை பொருத்தமட்டில் முதலில் என்னென்ன போட்டித்தேர்வு உள்ளதென்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தயார்படுத்தி கொள்ள வேண்டும் . அதற்கு தகுந்த கோச்சிங் கிளாஸ் சென்று அறிவை வளர்த்து கொள்ள வேண்டும், இந்த இரண்டு நாள் முகாமில் பங்குபெறும் நீங்கள் அனைவரும் உங்களை தகுதிபடுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றிபெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை, இணை இயக்குநர் சுரேஷ்குமார், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் கீதா, கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி.எஸ்.கே.ஆர்.பெரியசாமி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu