தொட்டியம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

தொட்டியம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
X

தொட்டியம் அருகே குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தொட்டியம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் அலகரை ஊராட்சி 5, 6-வது வார்டு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து நேற்று மணமேடு-பவுத்திரம் சாலையில் உள்ள அலகரை பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலறிந்த முசிறி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, தொட்டியம் மண்டல துணை தாசில்தார் கவிதா, தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பெரியசாமி, ஞானமணி, அலகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பழுதான மோட்டார்களை சீரமைத்து குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மணமேடு-பவுத்திரம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture