முசிறியில் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சமையல் மாஸ்டர் கைது

முசிறியில் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சமையல் மாஸ்டர் கைது
X
முசிறியில் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சமையல் மாஸ்டரை போக்சா சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

முசிறி பெரியார் நகரில் வசித்து வருபவர் சிங்காரவேலன் (51). சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் விதவைப் பெண் ஒருவர் கடந்த 24.3.2021அன்று முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் பெரியார் நகரில் வசித்து வரும் சமையல் மாஸ்டர் சிங்காரவேலன் தனதுவீட்டில் யாரும் இல்லாத பொழுது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பாலியல் சீண்டல் செய்து எனது மகளை துன்புறுத்தல் செய்துள்ளார்.

எனவே சிங்காரவேலன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முசிறி குளித்தலை இணைக்கும் தந்தை பெரியார் பாலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த சிங்காரவேலனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் முசிறி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி பாலியல் சீண்டல் போக்சோ வழக்கில் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் முசிறியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
crop opportunities ai agriculture