திருச்சி அருகே கூட்டுறவு ஆய்வாளரை தாக்கியதாக போலீசில் புகார்

திருச்சி அருகே  கூட்டுறவு ஆய்வாளரை தாக்கியதாக போலீசில் புகார்
X
வேறொரு பெண்ணுடன் பேசிய கூட்டுறவு ஆய்வாளரை தாக்கிய மனைவி குடும்பத்தினர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் கூட்டுறவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜீவானந்தம் (வயது 34). இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பவானிதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜீவானந்தம் அவருடைய தூரத்து உறவினரான எமல்டாமேரி என்ற பெண்ணை தன்னுடைய வீட்டில் அழைத்து பேசியுள்ளார். இது பவானிதேவிக்கு தெரியவந்ததையடுத்து அவருடைய உறவினர்கள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள் என மொத்தம் 8-க்கும் மேற்பட்டோர் ஜீவானந்தத்தின் வீட்டிற்கு சென்று எமல்டாமேரி, ஜீவானந்தம் ஆகிய இருவரையம் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து ஜீவானந்தம் தொட்டியம் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க