திருச்சி அருகே முதியவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சிறுவர்கள்

திருச்சி அருகே முதியவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சிறுவர்கள்
X

கொலை செய்யப்பட்ட சரவணன்.

திருச்சி அருகே முதியவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சிறுவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 64). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு உள்ள ஒரு கிணற்றில் பிணமாக கிடந்தார். முசிறி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் சரவணன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இப்போது இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சிறுவர்கள் இருவரும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள் .சம்பவத்திற்கு முதல் நாள் சரவணன் வீட்டு முன்பு சிறுவர்கள் கிணற்றில் குளித்துவிட்டு வந்து ஈரத்துணியை பிழிந்தபோது அதை அவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் சிறுவர்கள் இருவரும் சரவணன் காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அவரை அடித்து கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசியது தெரிய வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் திருச்சியில் உள்ள சிறுவர் காப்பகத்தில் அடைத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!