முசிறி பகுதியில் 7 மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

முசிறி பகுதியில் 7 மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
X
முசிறியில் 7 திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்; 2 பேர் கைது.

திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் முசிறி காவிரி பெரியார் பாலம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தொட்டியம் பகுதியை சேர்ந்த நல்லசிவம் (வயது 19), விஜய் (21) ஆகியோரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் அவர்கள் முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களையும், தொட்டியத்தில் 2 ஆடுகளையும் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 7 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!