திருச்சி அருகே குடோனில் பதுக்கி வைத்த 600 மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி அருகே குடோனில் பதுக்கி வைத்த 600 மது பாட்டில்கள் பறிமுதல்
X

மது பாட்டில்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 600 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த கண்ணனூர் அருகே சிலர் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுஜித்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் கண்ணனூர் சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது கண்ணனூர் டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு குடோனில் 600 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கள்ளத்தனமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்த குற்றத்திற்காக துறையூர் மணிமாறன், திருத்தலையூர் வேலுச்சாமி, செளந்தரராஜன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் இது குறித்து முசிறி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture