தாத்தையங்கார் பேட்டை தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5.40 லட்சம் மோசடி

தாத்தையங்கார் பேட்டை  தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5.40 லட்சம் மோசடி
X
தனியார் நிதி நிறுவனத்தில் மோசடி. கிளை மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை கடைவீதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் கிளை மேலாளராக சதீஷ் (வயது 25) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் அலுவலர்கள் கணக்குகளை தணிக்கை செய்யும் போது ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் தன்னிச்சையாக கிளை மேலாளர் கையாடல் செய்ததாக தெரியவந்தது.இதுகுறித்து தனியார் நிதி நிறுவன வட்ட மேலாளர் தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கிளை மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future