சுரங்கப்பாதை நீரில் பிணமாக மிதந்த தொழிலாளி

சுரங்கப்பாதை நீரில் பிணமாக மிதந்த தொழிலாளி
X
மணப்பாறையில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் நீரில் பிணமாக மிதந்த தொழிலாளி

மணப்பாறையில், திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் சுமார் 6 அடிக்கு அதிகமாக தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். தற்போது பெய்து வரும் கனமழையால் தண்ணீர் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சுரங்கப்பாதை நீரில் ஒருவர் பிணமாக மிதந்ததை பார்த்த மக்கள், இதுகுறித்து மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர் பொத்தமேட்டுப்பட்டி நேருஜி நகரைச் சேர்ந்த சரவணன் (வயது 45) என்பதும், தச்சு தொழிலாளி என்பதும், சுரங்கப்பாதை நீரில் அவர் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!