வையம்பட்டி அருகே திருமண நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

வையம்பட்டி அருகே திருமண நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X
வையம்பட்டி அருகே திருமண நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள சீத்தப்பட்டியை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 22), பெயிண்டர். இவரது மனைவி திவ்யஜெரீனா (21).திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் ஒரு மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளது. நேற்று ராபர்ட் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார்.

அவரது மனைவி திவ்ய ஜெரீனா வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்ததையடுத்து வேலைக்கு சென்ற ராபர்ட் உடனடியாக வீடு திரும்பினார். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவ்ய ஜெரீனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. சிந்துஜா விசாரணை நடத்தினார். திருமண நாளான நேற்று திவ்யஜெரீனா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!