லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்
X
திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள வெங்கிட்நாயக்கன்பட்டி கிராமம் கீழ்வால் பட்டியை சேர்ந்தவர் ஸ்டாலின்(வயது 34). இவர் பட்டா பெயர் மாறுதலுக்காக வெங்கிட்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்வத்தை அணுகியுள்ளார். அதற்கு ரூ.30 ஆயிரம் வரை கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன்படியே ஸ்டாலின் ரூ.25 ஆயிரம் மற்றும் அடுத்ததாக ரூ.3 ஆயிரம் கொடுத்தார். ஆனால், ஸ்டாலினுக்கு பட்டா மாறுதல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஸ்டாலின் முறையிட்டுள்ளார். மேலும், கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags

Next Story
ai based healthcare startups in india