திருச்சி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய 2 பேர் கைது

திருச்சி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய 2 பேர் கைது
X
பைல் படம்.
திருச்சி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள அடைக்கம்பட்டி அண்ணா நகரில் இருந்து செம்மண் அள்ளி கடத்தி செல்லப்படுவதாக துவரங்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் பொக்லைன் எந்திரம் மூலம் அனுமதியின்றி செம்மண் அள்ளி கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி, டிராக்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முக்கன்பாலம் பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 24), அவரது தம்பி செந்தில்குமார் (வயது 22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய பொக்லைன் எந்திர டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!