திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வேலக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புலவர் செங்குட்டுவான். இவர் கடந்த 1996 முதல் 2001 வரை கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக இருந்தார்.
அமைச்சர் ஆகப் பதவி ஏற்பதற்கு முன்னர் அவருடைய சொத்து மதிப்பு 3 லட்சத்து 68 ஆயிரத்து 219 .அமைச்சர் பதவியில் இருந்து அவர் இறங்கிய பின்னர் சொத்து மதிப்பு ஒரு கோடியே ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 971 ஆக இருந்தது .
புலவர் அமைச்சராக இருந்ததால் அரசு ஊழியராக கருதப்பட்டு அவர் தனது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 81 லட்சத்து 42 ஆயிரத்து 977 ரூபாய் சொத்துக்களை தனது மகன்கள் மற்றும் மகள்கள் பெயரில் குவித்ததாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 101 சாட்சிகள் மற்றும் 254 சான்றாவணங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி கே .பாபு இன்று தீர்ப்பளித்தார். அதில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக புலவர் செங்குட்டுவன் அவருடைய மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல் மற்றும் மகள் மீனாட்சி, தம்பி மகள் வள்ளி, மருமகன் ராஜலிங்கம் ஆகியோருக்கு தலா3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் தலா 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
புலவர் செங்குட்டுவன் ,அவரது மருமகன் ராஜலிங்கமும் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதால் அவர்கள் இருவருக்கும் இந்த தண்டனை பொருந்தாது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ். ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu