வையம்பட்டியில் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை-வாகனங்கள் பறிமுதல்

வையம்பட்டியில் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை-வாகனங்கள் பறிமுதல்
X
திருச்சி அருகே போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி விதிகளை மீறி இயக்கப்பட்ட 6 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் வையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் சாலை வரி செலுத்தாமலும், அனுமதியின்றியும் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி போக்குவரத்து துணை ஆணையர் அழகரசு உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மேற்பார்வையில் மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராஜன் வையம்பட்டி பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது லாரி, தனியார் நிறுவனங்களின் வேன் மற்றும் மினி பஸ் ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்த போது சாலை வரி செலுத்தாமல் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து லாரி, தனியார் நிறுவன வேன், மினி பஸ் உள்ளிட்ட 6 வாகனங்களை பறிமுதல் செய்து மாகாளிப்பட்டியில் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதில் தனியார் நிறுவனங்களில் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் அனுமதி பெற்று மற்ற மாவட்டங்களில் அனுமதியின்றி இயக்கப்பட்டது தெரிய வந்தது. இதே போல் 6 வாகனங்களிலும் ரூ.1.10 லட்சம் சாலை வரி செலுத்தாததும் தெரிய வந்தது. இதையடுத்து வாகனங்களுக்கு ரூ.62 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு விதி மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!