மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளம்பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளம்பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சரவணம்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சத்தியா(வயது 18). இவர் அதே பகுதியில் உள்ள சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் குளித்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்தியாவை மீட்க முயன்றனர். ஆனால் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவர் எந்த பகுதியில் இருக்கிறார் என்று கேமரா மூலம் கண்டறியப்பட்டு அதன்மூலம் தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!