மணப்பாறை அருகே குடும்ப தகராறில் டாஸ்மாக் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

மணப்பாறை அருகே   குடும்ப தகராறில் டாஸ்மாக் ஊழியர் தூக்கிட்டு  தற்கொலை
X
மணப்பாறை அருகே குடும்ப தகராறில் டாஸ்மாக் ஊழியர் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், காச்சக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி (வயது 45). இவர், ஆர்.எஸ்.வையம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற பாலசுப்ரமணி அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil